ஒரு அற்புதமான புனித பயணத்திற்கு உங்களை வரவேற்கிறேன்

ஆகாஷிக் பதிவுகள்

உங்கள் விழிப்புணர்வை அடுத்த உயர்நிலை பரிமாணத்திற்கு உயர்த்துவதற்கான புதிய பயணத்திற்கு உங்களை வரவேற்கிறேன்

 

நீங்கள் ஒரு சாதாரண மனிதர் மட்டுமல்ல, மனித அனுபவத்திற்காக இந்த பூமிக்கு வந்த ஒரு புனித ஆன்மா

You are a Spiritual being / Divine Soul incarnated here in this planet for a complete human experience.

நம் உடலின் இயக்கத்தையும்,  நம் மனதின் இயக்கத்தையும் நாம் நன்கு அறிவோம்.  இதனை பராமரித்துக்கொள்ள தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளையும் அறிவோம் ,  உடலில் ஏதாவது கோளாறு என்றால் மருத்துவரையும்,  மனதில் ஏதாவது கோளாறு என்றால்  மனநல மருத்துவரையும் அணுகி  சரி செய்து கொள்ள  தெரியும். ஆனால் உண்மையில் நம் உடலையும் நம் மனதையும் இயக்கிக் கொண்டிருப்பது நம் ஆன்மா தான்.

ஆன்மா என்பது என்ன.?  ஆன்மா எங்கிருந்து வந்தது?   ஆன்மாவால் எவ்வாறு இயங்க முடிகிறது?  இதுபோன்று இருக்கும் பல கேள்விகளுக்கு மிகவும் சுருக்கமாக இங்கே விளக்கிஉள்ளேன்.

இறை,  இறை   என்பதே அனைத்தும்,  அனைத்தும் இறை.

நீங்கள் இறையாக இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்,  அனைத்தும் நீங்கள்,  எதிலிருந்தும் வேறுபட மாட்டீர்கள்,  பின்பு எவ்வாறு அனுபவங்கள் ஏற்படும்?

இறையே அனைத்துமாக இருப்பதால் இங்கு அனுபவத்திற்கு சாத்தியமில்லை,  ஏனென்றால் அனுபவத்திற்கு அனுபவம்  மற்றும் அனுபவிப்பவன் என்ற இரு அம்சங்கள் தேவை, எனவே இறையே தன்னிலிருந்து பிரித்து அனுப்பிய ஒரு சிறு பகுதியே  ஆன்மாவாகும்.

ஆன்மாவிற்கு இயக்கத்தையும் , சக்தியையும்  அளிப்பது  வைட்டல் போர்ஸ் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தி  ஆகும்.

பிரபஞ்ச சக்தியும்  இறையிலிருந்து தான் சக்தியை கிரகித்துக் கொள்கிறது.

ஆன்மாவின் இயக்கத்துக்கு  உறுதுணையாக இருப்பதும்  பிரபஞ்ச  சக்தியே,  படைப்புத்திறன் மற்றும் செயல்திறன் போன்ற அனைத்து அனுபவத்திற்கும் உறுதுணையாக இருப்பதும் பிரபஞ்ச சக்தியே.

எல்லையற்ற இறையிலிருந்து பிரிந்து வந்த ஆன்மா பல பரிமாணங்களை உடையது. பிரபஞ்சத்தில், அபரிவிதமான  ஆற்றலையும் எல்லையற்ற  சக்தியையும் கொண்ட ஆன்மா தனது இருப்பை படிப்படியாக பல பரிமாணங்களில் குறைத்து  இந்த பூமியில் உடல் எடுக்கும் பொழுது 3D  / THIRD DIMENSION REALITY  (Length/நீளம், Width/அகலம், Heigh/உயரம்) எனப்படும் மூன்றாம் கட்ட பரிமாணமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது, நம்  உடலின் அசைவுகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்கும் நம் மனம் ஆனது உடலின் அடுத்த உயர்ந்த  தளமான 4D / FOURTH DIMENSION REALITY (TIME / நேரம்) எனப்படும் நான்காம் கட்ட  பரிமாணமாக இருக்கிறது,  இதனைக் கடந்து அதாவுது நம் மனம் மற்றும் உடலை கடந்து அடுத்த உயர்ந்த கட்டமான  5D / FIFTH DIMENSION REALITY  எனப்படும் ஐந்தாம் கட்ட பரிமாணமான  ஆகாஷிக் பதிவுகள் உள்ளது. ஆகையால்  இயல்பான நிலையில் இதனைப் புரிந்து  கொள்வது கடினம்.

இந்த ஐந்து கட்ட பரிமாணங்களை கடந்தும் ஆன்மாவிற்கு அடுத்த உயர்நிலை (6D, 7D,,,,,,,) பரிமானங்கள் இருப்பில் இருக்கின்றன, ஆனால் இந்தத் தொகுப்பில்  நாம் கலந்துரையாட இருப்பது ஆன்மாவின் ஐந்தாம்  கட்ட பரிமாணமாக இருக்கும் ஆகாஷிக் பதிவுகள் பற்றி மட்டுமே.

வாருங்கள் ஒரு புதிய அறிமுகத்திற்கு...!

ஆகாஷிக் என்பது ஒரு சமஸ்கிருத சொல், இதனை தமிழில் நாம் ஆகாயம் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இதனை Multi Dimensional Library / பல பரிமாண நூலகம் என்றும் அழைக்கலாம், Time / Space - நேரம் மற்றும் தூரத்தினை கடந்து இயங்கும் ஒரு சக்தி வாய்ந்த தரவுத்தளம் என்றும் அழைக்கலாம்.

ஆகாஷ் பதிவுகள் என்பது ஐந்தாம் பரிமாணத்தில் இருக்கக்கூடிய ஒரு Energetic Database / ஆற்றல் மிக்க தரவு தளம். இதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் இணையதளம் / INTERNET.
எப்படி இணையதளத்தில் / INTERNET நமக்கு தேவைப்படும் Website முகவரியை கொடுத்து அதன் தரவுகளை பார்க்க இயல்கிறதோ, அவ்வாறே ஆன்மாவின் தரவுகளை ஆகாஷிப் பதிவுகளில் காண இயலும்

ஆகாஷிக் பதிவுகள்

ஆகாஷ் பதிவுகளில், ஒவ்வொரு ஆன்மாவின் விவரங்களும் முழுமையாக இருப்பு இருக்கும், ஆன்மாவின் உயர்ந்த நிலை தளத்திலிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில், உங்கள் தனிப்பட்ட தரவுகளை (Database) பதிவிறக்கம் (Download) செய்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.

இதில் நம் ஆன்மாவின் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ள இயலும், மேலும் நம் ஆன்மா எந்த விதமான அனுபவத்திற்காக பூமிக்கு வந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதனை செயலாற்றும்பொழுது ஆன்மாவுடன் ஆன ஒருங்கிணைப்பு மிகவும் அதிகபடுகிறது.மேலும் கடந்த பல பிறவிகள் மூலம் ஆன்மாவில் ஏற்பட்ட பாதிப்புகள் காயங்கள் கர்ம வினைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மாவின் தளத்தில் குணப்படுத்துதல்

ஆகாஷிக் பதிவுகளிலிருந்து படித்ததன் விளைவாக, நமது ஆன்மாவின் பயணம் மற்றும் அதன் பரிணாமப் பாதை பற்றிய தெளிவு கிடைக்கிறது.
ஆன்மாவில் கடந்த பல பிறவிகளில் ஏற்பட்ட முக்கிய கர்மவினைகள் மேலும் மற்ற ஆன்மாக்களுடன் ஏற்பட்ட இணைப்பு பந்தங்கள், பிரச்சனைகளை தெரிந்து கொண்ட பிறகு அதனை சரி செய்வதற்கு நீங்கள் விருப்பப்படும் பட்சத்தில், நான் உங்களுக்கு சில எளிய பிரார்த்தனைகளை / ஹீலிங் Healing வழங்குவேன்.

ஆன்மாவை பற்றிய ரகசியங்களை மனதிற்கு தெளிய வைக்கும் பொழுது, நீங்கள் வாழ்க்கையை அணுகும் கோணம் முற்றிலும் மாறுபடுகிறது.

வாருங்கள் ஒரு புதிய தொடக்கத்திற்கு...!

இவற்றை நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்

இந்த பூமியில் நாம் பிறவி எடுக்கும் பொழுது, நமது ஆன்மாவின் கடந்த கால பிறவிகளின் ரகசியங்கள் / கர்மாக்கள் அனைத்தும் மறைத்து வைக்கப்படுகிறது, மேலும் ஆன்மாவுடனான தொடர்பு ரகசியங்கள் அனைத்தும் மறைபொருளாக இருக்கின்றன.

எனவே ஆன்மாவுடன் ஆன இணைப்பினை வலு சேர்ப்பதற்கு AKASHIC RECORDS ஒரு சக்திவாய்ந்த தளம் / கருவியாக இருக்கிறது.

நம் மனம், ஆன்மாவின் தன்மையை புரிந்து கொண்டு, ஆன்மாவுடன் நேர்கோட்டில் பயணிக்க கற்றுக்கொண்டால் பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் கிரகிக்க முடியும், இதன் விளைவாக இந்த பூமியில் சக்தியின் வெளிப்பாடாக இருக்கும் அனைத்திலும் பூரணத்தை உணர இயலும்.

உங்கள் உண்மையான இருப்புநிலை என்பது உங்கள் உடல் யதார்த்தத்தை விட மிக அதிகம். இத்தளம் உங்கள் உண்மையான இயல்பினை புரிந்துகொள்வதற்கும் மேலும் உங்கள் முழுமையான திறனை வெளிப்படுத்துவதற்கும் ஒரு அற்புதமான முயற்சியாகும்.

தன்னை உணர ஒரு உன்னத பயணம்...!

அமர்வு முன்பதிவு

நீங்கள் செய்யவேண்டியவை:    குறிப்பு: ஆன்மாவின் உயர்ந்த பரிமாணத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே தங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள இயலும்

    Call Now Button